சிட்டி சென்டர் வளாகத்தில் மர்மமான முறையில் இறந்த பெண்ணின் பெயர், விவரம் வெளியீடு!
பிரித்தானியாவில் லிவர்பூல் சிட்டி சென்டர் வளாகத்திலிருந்து விழுந்து மர்மனான முறையில் இறந்த மாணவியின் பெயர் மற்றும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 1-ஆம் திகதி, செவ்வாய்கிழமை இரவு 10.40 மணியளவில், அடையாளம் தெரியாத 18 வயது மாணவி ஒருவர் லிவர்பூலில் உள்ள Irwell Chambers வளாகத்தின் மேலிருந்து விழுந்தார்.
அவசர உதவிக்காக மருத்துவர்கள் குழு வருவதற்கு முன்பாகவே, சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண் ஹடர்ஸ்ஃபீல்டை சேர்ந்த எல்லா ஹாலிடே (Ella Halliday) என்றும், லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த மர்மமான மரணம் தொடர்பாக, எல்லாவை அறிந்த ஒரு 21 வயது நபரை பொலிஸார் கைது செய்து விசாரித்தனர். பின்னர் அவர்மீது வழக்கு ஏதும் பதியப்படாமல் விடுவிக்கப்பட்டார்.
எல்லாவின் குடும்பத்தினர் விரைவில் ஹடர்ஸ்ஃபீல்ட் தகனத்தில் அவருக்கான ஒரு தனியார் குடும்ப இறுதிச் சடங்கை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், எல்லாவின் நினைவாக Candlelighters என்ற தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடை அளிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், எல்லா ஹாலிடேவின் மரணம் தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்கவுக்கதாக Merseyside பொலிஸார் கூறியுள்ளனர்.