லண்டன் இளைஞரின் மோசடியில் சிக்கிய சுவிஸ் மக்கள்: சிறைத்தண்டனை
சுவிஸ் மக்களின் தரவுகளைத் திருடும் வகையில் போலி இணைய பக்கங்களை உருவாக்கி மோசடி செய்த லண்டன் இளைஞர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லண்டன் இளைஞரின் மோசடி
பிரித்தானியாவின் லண்டனைச் சேர்ந்த Ollie Holman (21) என்னும் இளைஞர், மக்களின் தரவுகளைத் திருடும் வகையில் போலி இணைய பக்கங்களை உருவாக்கியுள்ளார்.
அரசு, வங்கிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் இணைய பக்கங்களைப் போலவே தோற்றமளிக்கும் அவற்றை யாரும் எளிதில் நம்பிவிடும் வகையில் அவை உருவாக்கப்பட்டிருந்தன.
உதாரணமாக, தொண்டு நிறுவனம் ஒன்றின் இணைய பக்கம் போல காணப்படும் ஒரு பக்கத்தை நம்பி ஒருவர் அந்த தொண்டு நிறுவனத்துக்கு நிதி வழங்க முற்படும்போது, அவருடைய கிரெடிட் கார்டு குறித்த விவரங்களை மோசடியாளர்கள் திருடிவிடுவார்கள்.
24 நாடுகளில் மோசடியில் ஈடுபட்ட Holman, இந்த மோசடி மூலம் சுவிஸ் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்தும் சுமார் 2.4 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை மோசடி செய்துள்ளதாக சுவிஸ் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Holman கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |