பிரித்தானியாவில் பணப்பிரச்சினை காரணமாக உணவை தியாகம் செய்யும் பயிற்சி செவிலியர்கள்
பிரித்தானியாவில், செவிலியர் பயிற்சி பெறும் மாணவ மாணவியர் பணப்பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும், பலர், உணவு முதலான அடிப்படைத் தேவைகளைக் கூட தியாகம் செய்வதாகவும் ஆய்வொன்று தெரிவிக்கிறது.
உணவை தியாகம் செய்யும் பயிற்சி செவிலியர்கள்
மூன்றாம் நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர், இன்றும், பணிக்காகவும் படிப்புக்காகவும் பிரித்தானியா போன்ற நாடுகளுக்குச் செல்ல ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

ஆனால், அப்படி அவர்கள் பணக்கார நாடுகள் என நினைக்கும் நாடுகளில் நிலவும் சில பிரச்சினைகளைப் பார்த்தால் வியப்பாக உள்ளது.
ஆம், Royal College of Nursing (RCN) சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில், பிரித்தானியாவில் செவிலியர் பயிற்சி மேற்கொள்ளும் மாணவிகளில் 95 சதவிகிதம் பேர், தங்கள் நிதி நிலைமை குறித்து கவலைப்படுவது தெரியவந்துள்ளது.
அத்துடன், 56 சதவிகித மாணவிகள், உணவு முதலான அடிப்படைத் தேவைகளைக் கூட தியாகம் செய்வதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
34 சதவிகித மாணவியருக்கு மாதக்கடைசியில் 500 பவுண்டுகள் வரை பற்றாக்குறை ஏற்படுவதாகவும், அதற்காக அவர்கள் ஒன்றில் அடிப்படைத் தேவைகளைக் கூட தியாகம் செய்யவோ அல்லது கடன் வாங்கவோ செய்வதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது, வியப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |