பிரித்தானியாவில் உச்சம் தொட்ட காட்டுத்தீ சம்பவம்: குறையும் தீயணைப்பு பணியாளர்கள் எண்ணிக்கை
பிரித்தானியாவில் இந்த ஆண்டு காட்டுத்தீ சம்பவங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதிகரிக்கும் காட்டுத்தீ எண்ணிக்கை
இந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் பதிவாகியுள்ள காட்டுத்தீ சம்பவங்கள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை மட்டும் சுமார் 996 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது 2022 ம் ஆண்டு பதிவான 994 என்ற முந்தைய அதிக எண்ணிக்கை என்ற நிலையை கடந்துள்ளது.
மேலும் இந்த ஆண்டுக்கு 3 மாதங்கள் மீதம் இருக்கும் நிலையில் காட்டுத்தீ சம்பவங்கள் 1000-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2022ம் ஆண்டு கடைசி 3 மாதங்களில் மட்டும் 19 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
குறைந்த தீயணைப்பு வீரர்களின் எண்ணிக்கை
இந்த அதிகரித்த காட்டுத்தீ சம்பவங்களின் விளைவாக பிரித்தானியாவில் தீயணைப்பு வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
NFCC வழங்கிய தகவல்படி, 2008ம் ஆண்டில் இருந்து தற்போது 25% தீயணைப்பு வீரர்கள் அதாவது 11,000 பணியாளர்களை தீயணைப்பு துறை இழந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |