காப்பீடு பணத்துக்காக 2 கால்களையும் வெட்டிக்கொண்ட மருத்துவர் - இறுதியில் நேர்ந்த சோகம்
காப்பீடு பண பெற தனது 2 கால்களையும் வெட்டிக்கொண்ட மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கால்களை வெட்டிக்கொண்ட மருத்துவர்
பிரிட்டானியாவின் ட்ரூரோவை கார்ன்வாலைச் சேர்ந்த 49 வயதான நீல் ஹாப்பர், வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து வந்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு, செப்சிஸால் தனது இரு கால்களையும் இழந்ததாக கூறி, 5,00,000 பவுண்ட்(இந்திய மதிப்பில் ரூ.5.4 கோடி) காப்பீடு கோரி, காப்பீடு நிறுவனத்தில் விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், இவர் காப்பீடு தொகைக்காக வேண்டுமென்றே தனது கால்களை வெட்டிக்கொண்டதாக காப்பீடு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன.
சுறுசுறுப்பாக இருக்கிறேன்
இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆகஸ்ட் 21, 2018 முதல் டிசம்பர் 4, 2020 வரை, வலைத்தளத்திலிருந்து கைகால்கள் அகற்றப்படுவது எப்படி என்பதை காட்டும் வீடியோக்களை வாங்கியது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பின்னர் அவர் பணியாற்றி வந்த ராயல் கார்ன்வால் மருத்துவமனை NHS அறக்கட்டளையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய மருத்துவர் நீல் ஹாப்பர், "3 மாதங்களில் நடக்க முடியும் என்று கூறப்பட்டது. அது போல் நடக்கிறேன். விரைவாக குணமடைந்து விட்டேன்.
அதைச் சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நான் முன்பு இருந்ததை விட கால்களை இழந்ததால் இப்போது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்" என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |