பிரித்தானியா-சுவிட்சர்லாந்து புதிய ஒப்பந்தம்: தொழில்முறை அனுமதிகளுக்கு எளிதாக வாய்ப்பு
பிரித்தானியா மற்றும் சுவிட்சர்லாந்து இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
பிரித்தானியாவில் தகுதிபெற்ற தொழில்முறையாளர்கள் (proffessionals), இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் சுவிட்சர்லாந்தில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த UK-Switzerland Recognition of Professional Qualifications Agreement-ஐ வர்த்தக மற்றும் வணிகத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
200க்கும் மேற்பட்ட தொழில்முறைகளுக்கு அங்கீகாரம்
இந்த ஒப்பந்தத்தின்படி, 200-க்கும் மேற்பட்ட தொழில்முறைகளில் வேலை செய்ய பிரித்தானிய பிரஜைகளின் தகுதிகளை சுவிட்சர்லாந்து அங்கீகரிக்கும்.
இதன் மூலம் வழக்கறிஞர்கள், பனிச்சறுக்கு பயிற்சியாளர்கள், ஆனஸ்தீசியா நிபுணர்கள் மற்றும் டிரைவிங் இன்ஸ்ட்ரக்டர்கள் போன்ற பல்வேறு துறைகளின் தொழில்முறையாளர்கள் பயன்பெறுவர்.
முந்தைய ஒப்பந்தத்தின் மாற்றாக
இந்த புதிய ஒப்பந்தம் 2018-ல் மேற்கொள்ளப்பட்ட Citizens’ Rights Agreement-க்கு மாற்றாக கொண்டுவரப்படுகிறது.
அப்போது பிரித்தானியா மற்றும் சுவிட்சர்லாந்து குடியிருப்பாளர்கள் இடையே தொழில்முறை அனுமதிகள் வழங்கப்பட்டன. அந்த ஒப்பந்தம் 2024 இறுதியில் காலாவதியானது.
“சுவிட்சர்லாந்துடன் நாங்கள் உலகத் தரத்தில் சிறந்த சேவைகளை வழங்குவதற்காக இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளோம். இதன்மூலம் பிரித்தானிய தொழில்முறை நிபுணர்களுக்கு வெளிநாடுகளில் வேலை செய்யும் அனுபவத்தை எளிதாக்கவேண்டும்” என்று பிரித்தானிய வணிக செயலாளர் ஜோனத்தான் ரெனால்ட்ஸ் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்த அறிவிப்பு Davos-ல் உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) வருடாந்திர கூட்டம் நடைபெறும் நேரத்தில் வெளியாகியுள்ளது.
உலக சந்தையில் எதிர்மறை நிலைமைகள் அதிகரிக்கும் நிலையில், இந்த ஒப்பந்தம் வணிக வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இது, உலகளாவிய பொருளாதாரங்களில் சுமுகமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK-Switzerland New agreement, New agreement to enable UK-qualified professionals to work in Switzerland