பிரித்தானியாவுக்கு வரலாற்று பெருமையை தேடித் தந்த 13 வயது சிறுமி!
பிரித்தானியாவின் மிக இளம் ஒலிம்பிக் வீராங்கனையான 13 வயது சிறுமி, டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
பிரித்தானியாவை குறிக்கும் Team GB அணியைச் சேர்ந்த இளம் ஒலிம்பிக் விளையாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றவர் Sky Brown.
வெறும் 13 வயதே ஆகும் அவர் (13 வருடம் 28 நாட்கள்) இப்போது ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் விளையாட்டுகளில், பார்க் ஸ்கெட்டிங் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று பிரித்தானியாவுக்கு வரலாற்று மிக்க பெருமையை தேடித் தந்துள்ளார் ஸ்கை பிரவுன்.
இதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிரித்தானியாவின் மிக இளம் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.