துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம்
லண்டனில் நடந்த கார் விபத்து ஒன்றில் 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சிறையில் இருந்து விடுதலை
மார்கஸ் ஃபகானா என்ற 19 வயது பிரித்தானிய இளைஞர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 18 வயதில் இருந்தபோது 17 வயது சிறுமியுடன் உடலுறவு வைத்த குற்றத்திற்காக ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றார்.
ஆனால் துபாயின் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவருக்கு மன்னிப்பு வழங்கியதன் மூலம் தண்டனை 3 மாதங்கள் மீதம் இருக்கும் போதே (ஜூலையில்) விடுவிக்கபட்டார்.
சாலை விபத்தில் மரணம்
இந்நிலையில் ஃபகானா துபாயில் சிறையில் இருந்து விடுதலையான மூன்றே மாதத்தில் வடக்கு லண்டனில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
டாட்டன்ஹாம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ட்ரக்குடன் ஏற்பட்ட மோதல் விபத்தில் சிக்கி ஃபகானா உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட ஃபகானா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |