6 நாட்கள் பசியில் துடிதுடித்து இறந்த குழந்தை! வீட்டிற்குள் பூட்டிவிட்டு காதலனுடன் சென்ற தாய்க்கு தண்டனை
பிரித்தானியாவில் தனது 20 மாத குழந்தையை தனியாக வீட்டின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு, 6 நாட்களாக பட்டினி போட்டு கொன்ற கொடூர தாய்க்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பிரைட்டனில் வசிக்கும் 19 வயது இளம் பெண் வெற்பி குடி (Verphy Kudi), கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் திகதி, தனது 20 மாத குழந்தை ஆசியாவை (Asiah) வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
அங்கிருந்து லண்டனுக்குச் சென்ற வெற்பி குடி, அங்கு அவர் தனது பிறந்தநாளை காதலனுடன் கழித்தார். அதே சமயம், பச்சிளம் குழந்தை ஆசியா பசியில் தனது தாயை தேடிக்கொண்டு இருந்தது.
பின்னர், டிசம்பர் 7 அன்று அவர் Elephant and Castle-ல் நடந்த 1990's இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 9 அன்று அவர் பிரைட்டனில் இருந்து 150 மைல் தொலைவில் உள்ள கோவென்ட்ரியில் ஒரு பிறந்தநாள் விழாவிற்கு சென்றார்.
பின்னர் டிசம்பர் 11 அன்று மாலை 6 மணியளவில் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பிறகு அங்கு இறந்து கிடந்த குழந்தையை Royal Alexandra குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு குழந்தை இறந்துவிட்டது என உறுதி செய்தனர்.
குழந்தை ஆசியா 6 நாட்களாக பசியில் துடிதுடித்து, காய்ச்சல் வந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணையோ நடத்திவந்த நிலையில், கடந்த மார்ச் வெற்பி குடி தனது கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது. கொஞ்சமும் பொறுப்பு இல்லாமல், தன் சுய சந்தோஷத்திற்காக, எல்லாவற்றிற்கும் தாயை மட்டுமே நம்பி இருக்கும் பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்த வெற்பிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.