பிரித்தானியாவை வாட்டும் வெப்ப அலைகள்: பயிற்சியில் ராணுவ வீரருக்கு நடந்த பரிதாபம்!
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் இராணுவ தளபதி பயிற்சியை ரத்து செய்ய மறுத்ததால் இளம் ராணுவ வீரர் சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவில் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெப்பநிலை 40.3c என்ற உச்சத்தை தொட்டபோதும், இராணுவ தளபதி பயிற்சியை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.
இதனால் ரெஜிமெண்டில் உள்ள இளம் ராணுவ வீரர்களில் ஒருவர் தீடிரென மயங்கி சரிந்து விழுந்துள்ளார்.
Credit: Alamy
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி 2 நாட்களுக்கு பிறகு பரிதாபமாக உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடுமையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் வழிகாட்டுதல்களுக்குள் அதிகாலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டதாக ராணுவம் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் இராணுவ வீரர்களின் பயிற்சி எங்கு நடத்தப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
Credit: Alamy
கூடுதல் செய்திகளுக்கு: உணவு தானிய ஏற்றுமதி... கொண்டாட்டங்கள் மிக விரைவானது: ஜெலென்ஸ்கி கருத்து!
இதுகுறித்து முன்னாள் கர்னல் ரிச்சர்ட் கெம்ப் தெரிவித்துள்ள கருத்தில், பயிற்சி ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.