பிரித்தானியாவில் 15 வயது தங்கையை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட இளைஞன்
பிரித்தானியாவில் தனது 15 வயது தங்கையை தானே கொலை செய்ததாக 19 வயது இளைஞர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 31 சனிக்கிழமையன்று, வேல்ஸின் அபெர்கெலேவுக்கு அருகிலுள்ள Towyn-ல் உள்ள டை மாவ்ர் விடுமுறை பூங்காவில் (Ty Mawr Holiday Park ) ஒரு இளைஞர் மற்றும் சிறுமிக்கு இடையே குடும்ப தகராறு நடப்பதாக பொலிஸுக்கு புகார் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று பார்த்தபோது, அமாண்டா எனும் 15 வயது சிறுமி உயிரிழந்து கிடந்தார். சிறுமியையே அவரது சகோதரனே கொலை செய்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, Greater Manchester-ல் உள்ள Ashton-under-Lyne பகுதியைச் சேர்த்த சிறுமியின் சகோதரனான 19 வயது மேத்தியூ செல்பியை (Matthew Selby) பொலிஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
Photo: Facebook
இந்த வழக்கு பிப்ரவரி 7, திங்கட்கிழமை நீதிம்னற விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட மேத்தியூ, தானே தனது தங்கையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
ஆனால், மேத்யூ தரப்பு வக்கீல், தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன், அவரை மீண்டும் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என கெண்ட்டுக்கொண்டார்.
அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி, மனநல பரிசோதனைக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை மார்ச் 18-ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது உத்தவிட்டார்.


