குடும்ப சுற்றுலாவில் பிரித்தானியாவின் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்! விசாரணை தீவிரம்
அமெரிக்காவுக்கு விடுமுறை கொண்டாட்டத்திற்கு சென்ற பிரித்தானியாவை சேர்ந்த 13வது சிறுமி உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துயரில் முடிந்த விடுமுறை கொண்டாட்டம்
அமெரிக்காவின் புளோரிடாவில் விடுமுறை கொண்டாட்டத்தில் இருந்த பிரித்தானிய குடும்பத்திற்கு கடந்த மே மாத இறுதியில் துயரகரமான சம்பவம் ஏற்பட்டுள்ளது.
புளோரிடாவின் Orlando-வில் உள்ள pool at Discovery Cove என்ற தீம் பார்க்கில் விடுமுறைக்கு சென்று இருந்த வேல்ஸை சேர்ந்த 13 வயதான அண்ணா பீமான்ட்(Anna Beaumont) மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
ஆரஞ்சு கவுண்டி ஷெரிஃப் அலுவலக தகவலின்படி, மே 28 ஆம் தேதி அண்ணா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆழ்ந்த துயரத்தோடு, அடுத்த நாள் அவர் காலமானார்.
இறப்புக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. மருத்துவ பரிசோதனை அலுவலகம் இதனை தீர்மானிக்கும்.
இரங்கல் தெரிவித்த பள்ளி
அண்ணா படித்த ராடீர் காம்ப்ரிஹென்சிவ்(Radyr Comprehensive) பள்ளியில் இருந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அங்கு அவர் பள்ளி சமூகத்தின் மதிப்புக்குரிய உறுப்பினர் என்று அவரை நினைவு கூர்ந்தனர். அவரது ஆசிரியர்கள் அவரது கருணை மற்றும் நேர்மறையான மனப்பான்மைக்காக அவரை நினைவு கொண்டனர்.
பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் அண்ணாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், இந்த கடினமான சமயத்தில் தூதரக ஆதரவை வழங்குவதாகவும் உறுதிப்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |