பிரித்தானிய பூங்காவில் இளைஞர் குத்திக் கொலை: குற்றவாளியான 15 வயது சிறுவன் பெயர் வெளியீடு
பிரித்தானியாவில் கேட்ஸ்ஹெட் பூங்காவில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியான 15 வயது சிறுவனின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
இளைஞர் கொலை
பிரித்தானியாவில் கடந்த அக்டோபரில் கேட்ஸ்ஹெட்டின்(Gateshead) இயற்கை பூங்காவில் டோமாஸ் ஓலெஸ்சாக்( Tomasz Oleszak, 14) என்ற இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 15 வயது(கொலையின் போது 14 வயதாக இருந்த) சிறுவன் லெய்டன் அமீஸ்(Leighton Amies) முதலில் கொலையை மறுத்தார்.
ஆனால் நியூகேஸில் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து இன்று குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
குற்றவாளியின் பெயர் வெளியீடு
கொலை குற்றம் உறுதி செய்யப்படாததால் கொலையாளியின் அடையாளத்தை முன்னர் வெளியிட முடியவில்லை.
இந்நிலையில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு இருப்பதால் நீதிபதி திரு ஜஸ்டிஸ் ஸ்பென்சர் அறிக்கையிடல் தடையை நீக்கினார்.
இதையடுத்து வழக்கு அறிக்கைகளில் குற்றவாளியின் பெயர் லெய்டன் அமீஸ்(15) என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலைக்கு பிறகு பெருமை பேசிய சிறுவன்
இளைஞர் டோமாஸ் ஓலெஸ்ஸாக் தனது காதலியுடன் வைட்ஹில்ஸ் பார்க் வழியாக இரவு 8 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இளைஞர்கள் குழு அவர்களைப் பின் தொடர்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
டோமாஸ் ஓலெஸ்ஸாக் கும்பலால் தாக்கப்பட்ட பிறகு லெய்டன் அமீஸ் கத்தியால் குத்தப்பட்டார்.
பாதிக்கப்பட்டவரின் மார்பில் ஆழமாக குத்திய பிறகு, "நான் உங்கள் பையனை நனைத்துவிட்டேன்" என்று எமிஸ் பெருமையாக பேசியதாக விசாரணையில் தெரியவந்தது.