'ப்ளீஸ் வெயிட்' தடுப்பூசி குறித்து வளரும் நாடுகளுக்கு பிரித்தானியா முக்கிய வலியுறுத்தல்!
'தங்கத் தரம்' கொண்ட தடுப்பூசிகளுக்காக சற்று காத்திருங்கள் என வளரும் மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளுக்கு பிரித்ததானிய வெளியுறவுத் துறை செயலாளர் Dominic Raab வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், ரஷ்ய மற்றும் சீன தடுப்பூசிகள் கிடைத்தால் போதும் என முடிவெடுத்துவிட வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.
தடுப்பூசி வழங்கலுக்காகக் காத்திருக்கும் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள் எதிர்கொள்ளும் “குழப்பமான உணர்வை” தான் புரிந்து கொண்டதாக கூறிய Raab,
எந்த தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்பது குறித்து விஞ்ஞானிகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனையை உலக நாடுகளின் நிர்வாகங்கள் பரிசீலிக்க வேண்டும் என்றும்,
கோவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார அமைப்பு (WHO) இலவசமாக வழங்கும் பாதுகாப்பான “தங்கத் தர” தடுப்பூசிகளுக்காக காத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
WHO ஆதரவு Covax திட்டம் வளரும் மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் பாராட்டினார்.