பிரித்தானியாவில் -5C என சரிந்த வெப்பநிலை: டசின் கனக்கான பாடசாலைகளுக்கு விடுமுறை
பிரித்தானியாவில் வெப்பநிலை ஒரே இரவில் -5 என சரிந்த நிலையில் டசின் கணக்கான பாடசாலைகள் மாணவர்கள் நலன் கருதி மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று பகல் கண்விழித்த பிரித்தானிய மக்கள், வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழ் இருந்ததை உணர்ந்துள்ளனர்.
@mirror
நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் பனிப்பொழிவு இருக்கும் என்றே வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஸ்காட்லாந்தில் இருந்து செல்ம்ஸ்ஃபோர்ட் வரை பனிப்பொழிவு இருக்க வாய்பிருப்பதாகவும் இன்று பகல் 11 மணி வரை மக்கள் கவனமாக இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் குளிர்கால நிலைமைகளை கருத்தில் கொண்டு சில பள்ளிகள் மாணவர்களை வீட்டிலேயே இருக்கச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. பல பகுதிகளில் பாடசாலைகள் பகல் 10 மணிக்கு மேல் திறக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான பள்ளிகள்
சில பள்ளிகள் 11.30 மணிக்கு, சில பள்ளிகள் 10.30 மணிக்கும் திறக்கப்பட உள்ளன. எசெக்ஸ் முழுவதும் உள்ள பல பள்ளிகள் வரும் நாட்களில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூடப்படுகிறது.
Image: Rick Findler
கும்ப்ரியா முழுவதிலும் உள்ள ஏராளமான பள்ளிகள் நாளை முழுமையாகவும் அல்லது பகுதியாகவும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ்ஷயர் கவுன்சில் கூறுகையில்,
எந்தப் பள்ளியும் மூடப்படுவது தொடர்பில் பெற்றோருக்கு அவர்களின் பள்ளி அல்லது கல்லூரி வழியாகத் தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர். எந்தப் பள்ளிகள் மூடப்படும் என்பதை பெட்ஃபோர்ட்ஷயர் கவுன்சில் இன்னும் வெளியிடவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |