ஈரானிலுள்ள பிரித்தானிய தூதரகம் மூடல்... பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஈரானில் நிலவும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, அங்குள்ள பிரித்தானிய தூதரகம் மூடப்பட்டுள்ளது.
ஈரானிலுள்ள பிரித்தானிய தூதரகம் மூடல்...
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகம் நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், அங்கிருந்து பிரித்தானிய தூதர் மற்றும் தூதரக அலுவலர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், பிரித்தானிய தூதரக இணையதளத்தில், ஈரானில் நிலவும் பாதுகாப்பு தொடர்பான சூழலைத் தொடர்ந்து, பிரித்தானிய தூதரக அலுவலர்களை ஈரானிலிருந்து வெளியேற்றியுள்ளதாக தெரிவித்துள்ள பிரித்தானிய அரசு, தூதரகம் ஒன்லைன் வாயிலாக செயல்படும் என தெரிவித்துள்ளது.
அத்துடன், பிரித்தானிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் பிரித்தானியாவுடன் தொடர்புடையவர்களை ஈரான் அதிகாரிகள் கைது செய்யும் அபாயம் உள்ளதாகவும் தூதரகம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
பிரித்தானியர்கள் ஈரானுக்கு பயணிப்பது குறித்து எச்சரித்துள்ள பிரித்தானிய அரசு, பிரித்தானியர்களும் பிரித்தானிய ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களும் கைது செய்யப்பட்டுக் காவலில் அடைக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |