பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை குறித்து அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கான அளவு ‘கணிசமான’ என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் 2021 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அடுத்தடுத்த நடத்தப்பட்ட இரண்டு பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கான அளவு ‘கடுமையான’ நிலைக்கு உயர்த்தப்படுவதாக கூட்டு பயங்கரவாத பகுப்பாய்வு மையம் (JTAC) அறிவித்தது.
இந்நிலையில், பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் அளவு ‘கடுமையாக’ என்பதிலிருந்து ‘கணிசமாக’ நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை உள்துறை அமைச்சர் பிரித்தி படேல் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார்.
இதன் மூலம் பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கான வாய்ப்பு ‘அதிக சாத்தியம்’பதிலாக சாத்தியமானதாகக் கருதப்படுகிறது.
பிரித்தானியா பயங்கரவாத அச்சுறுத்தலின் தற்போதைய தன்மையும் அளவும், 2021 அக்டோபர், நவம்பர் தாக்குதல்களுக்கு முன்னர் நாட்டில் காணப்பட்ட அச்சுறுத்தலின் அளவோடு ஒத்துப்போகிறது என்று JTAC தீர்மானித்திருப்பதாக பிரித்தி படேல் குறிப்பிட்டுள்ளார்.
2021 அக்டோபர் மற்றும் நவம்பரில் நடந்த தாக்குதல்கள் பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலின் சிக்கலான, நிலையற்ற மற்றும் கணிக்க முடியாத தன்மையை பிரதிபலிக்கின்றன என பிரித்தி படேல் தெரிவித்துள்ளார்.