பிரித்தானிய மக்களின் போன்களில் இன்று ”Emergency Alert System” சோதனை
பிரித்தானியாவில் இயற்கை சீற்றங்கள் போன்றவற்றை பற்றி முன் கூட்டியே அறிவிக்கும் வகையில் ”Emergency Alert System” என்ற திட்டம் அமல்படுத்தவுள்ள நிலையில் அதற்கான சோதனை நடைபெறுகிறது.
அவசர எச்சரிக்கை அமைப்பு
பிரித்தானியாவில் குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் ஏதேனும் இயற்கை பேரழிவுகளை, முன் கூட்டியே மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் “Emergency alert service" என்ற திட்டத்தை கொண்டு வரப் போகிறது.
இந்த திட்டத்தின்படி, பிரித்தானியாவின் ஏதாவது ஒரு பகுதியில் விபத்து ஏற்படுமாகின், அப்பகுதி மக்களின் போனுக்கு முன்கூட்டியே அலாரம் எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
@ukgoverment
10 விநாடி அலாரம் ஒலிக்கும் என்றும் போன் சைலண்டில் இருந்தால் கூட, அலாரம் ஒலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக பிரித்தானிய அரசு தொடர்ந்து பல சோதனைகளை நடத்தி வருகிறது.
இன்று முதல்கட்ட சோதனை
இந்தநிலையில் பிரித்தானியாவின் துணை பிரதமர் அறிவித்துள்ள அறிக்கையில் “இன்று மாலை சரியாக 3 மணி அளவில் பிரித்தானிய மக்களது போன்களுக்கு எச்சரிக்கை தரப்படும். மேலும் இது முதல்கட்ட சோதனை தான்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@gettyimages
”இந்த திட்டம் பிரித்தானிய மக்களுக்கு பயனுள்ள ஒரு கருவியாக அமையும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் போன்கள் அமைதியாக இருந்தாலும் ஒலிக்கும் 10 வினாடி அலாரம், பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் உட்பட பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை சீர்குலைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொசைட்டி ஆஃப் லண்டன் திரையரங்கம் அதன் உறுப்பினர்களுக்கு பார்வையாளர்களை தங்கள் தொலைபேசிகளை அணைக்க சொல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.
@ukgoverment
சோதனையின் போது தொலைப்பேசிகளை எடுக்க வேண்டாம் என்று ஓட்டுநர்கள் பிரித்தானிய அரசால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விழிப்பூட்டல்களைப் பெற விரும்பாதவர்கள் தங்கள் போனை சுவிட்ச் ஆப் செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.