ஒரே நபருக்கு லொட்டரியில் 26 மில்லியன் பவுண்டுகள் பரிசு: யார் அந்த அதிர்ஷ்டசாலி?
பிரித்தானியாவில் யூரோமில்லியன் லொட்டரிச்சீட்டு ஒன்றிற்கு 26 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ள நிலையில், பரிசு பெற்ற நபரை லொட்டரி நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது.
யார் அந்த அதிர்ஷ்டசாலி
வெள்ளிக்கிழமை இரவு குலுக்கலில் 26 மில்லியன் பவுண்டுகள் பரிசு வென்ற அந்த அதிர்ஷ்டசாலியை The National Lottery நிறுவனம் வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறது.
லொட்டரிச்சீட்டு வாங்கியவர்கள் தங்கள் சீட்டை சோதித்துப்பார்க்குமாறு லொட்டரி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
26 மில்லியன் பவுண்டுகள் என்பது இலங்கை மதிப்பில் 10,57,90,95,800.00 ரூபாய் ஆகும்.
இதற்குமுன் காதலர் தின குலுக்கலில் ஒருவருக்கு 65 மில்லியன் பவுண்டுகளும், ஜனவரியில் ஒருவருக்கு 83 மில்லியன் பவுண்டுகளும் பரிசு விழுந்துள்ள நிலையில், இந்த லொட்டரிச்சீட்டை வாங்கியவர், இந்த ஆண்டில் அதிக தொகை ஒன்றை பரிசாகப் பெறும் மூன்றாவது பிரித்தானியர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |