லொட்டரியில் 8,400 கோடி பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி பிரித்தானியர்!
பிரித்தானியர் ஒருவர் 'யூரோ மில்லியன்' லொட்டரியில் 195 மில்லியன் பவுண்டுகளை பரிசாக வென்றுள்ளார். இது இலங்கை பணமதிப்பில் ரூ. 8,399 கோடிகளாகும்.
யூரோ மில்லியன் லொட்டரியின் சாதனையை முறியடிக்கும் 195 மில்லியன் பவுண்ட் பரிசை இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வென்றுள்ளார் என EuroMillions லொட்டரி அமைப்பாளரான Camelot நிறுவனம் கூறியது.
இது இதுவரை இல்லாத மிகப்பெரிய தேசிய லாட்டரி வெற்றி என Camelot லொட்டரி நிறுவனம் கூறியது. வெற்றிபெற்ற பரிசுத்தொகையின் சரியான மதிப்பு £195,707,000 ஆகும்.
செவ்வாயன்று (ஜூலை 19) வெற்றி பெற்ற எண்கள் 6, 23, 27, 40, மற்றும் 41 ஆகும், மேலும் லக்கி ஸ்டார் எண்கள் 2 மற்றும் 12 ஆகும்.
இந்த எண்கள் கொண்ட டிக்கெட்டை வைத்திருக்கும் அதிர்ஷ்ட வெற்றியாளர் உடனடியாக தங்களை அழைக்குமாறு Camelot நிறுவனத்தின் மூத்த வெற்றியாளர்களின் ஆலோசகர் ஆண்டி கார்ட்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Someone in the UK has a lottery ticket worth €230,000,000 #Euromillions pic.twitter.com/47hP7AkM6y
— Killian Byrne (@killianbyrne) July 19, 2022
வாரத்திற்கு இருமுறை, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், 13 ஐரோப்பிய நாடுகள் EuroMillions டிராவில் பங்கேற்கின்றன. தேசிய லொட்டரி வரலாற்றில், மொத்தம் 15 பிரித்தானியர்கள் 100 மில்லியன் பவுண்டுகளுக்கு அதிகமான ஜாக்பாட்டை வென்றுள்ளனர்.
முன்னதாக பிரித்தானியாவில், இந்த ஆண்டு மே மாதத்தில், க்ளௌசெஸ்டரைச் சேர்ந்த ஜோ மற்றும் ஜெஸ் த்வைட் தம்பதி அதிகபட்சமாக 184 மில்லியன் பவுண்டு பரிசுத்தொகையை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.