புலம்பெயர்தல் விதிகளைக் கடுமையாக்கிய பிரித்தானியா: பிரித்தானியாவுக்கே பாதகமாக முடிந்தது
புலம்பெயர்தல் விதிகளைக் கடுமையாக்கியதன் பலனை பிரித்தானியா அனுபவிக்கத் துவங்கியுள்ளது.
புலம்பெயர்தல் விதிகளைக் கடுமையாக்கிய பிரித்தானியா
2021ஆம் ஆண்டு, பிரெக்சிட்டைத் தொடர்ந்து முதியோரைக் கவனித்துக்கொள்ளும் care worker என்னும் பணி செய்வோருக்கான புலம்பெயர்தல் விதிகளை நெகிழ்த்தியது பிரித்தானியா.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகக் கூறி, care worker பணி செய்வோர், தங்களுடன் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்துவர தடை விதித்தார் முந்தைய அரசின் உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி.
அத்துடன், சர்வதேச மாணவர்கள் தொடர்பிலான விதிகளும் கடுமையாக்கப்பட்டன.
அதன்படி, முதுகலை ஆராய்ச்சி படிப்பு படிப்பவர் தவிர்த்து, மற்ற சர்வதேச மாணவர்கள் இனி தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்து வர முடியாது.
மேலும், மாணவர்கள் தங்கள் படிப்பு முடிவதற்குள் வேலை விசாவிற்கு மாற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் வருபவர்களுக்கான குறைந்தபட்ச வருமான வரம்பு, 26,200 பவுண்டுகளில் இருந்து 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட்டது.
குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பும், 18,600 பவுண்டுகளிலிருந்து 29,000 பவுண்டுகளாக உயர்த்தப்பட்டது.
விசாவுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை குறைந்தது
ஆக, இப்படி பிரித்தானியா கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டே இருந்ததால், பிரித்தானியாவுக்கு புலம்பெயர விசாவுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது.
விசாவுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டுப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் எண்ணிக்கை, முந்தைய ஆண்டில் 141,000 ஆக இருந்தது, இந்த ஆண்டில் 91,000 ஆக குறைந்துவிட்டது.
பிரித்தானியாவுக்கே பாதகமாக முடிந்த கட்டுப்பாடுகள்
ஆனால், இப்படி புலம்பெயர்வோருக்கு கட்டுப்பாடுகள் விதித்ததன் பலனை அனுபவிக்கத் தொடங்கியுள்ளது பிரித்தானியா. ஆம், சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்ததால் அவர்கள் வேறு நாடுகள் பக்கம் திரும்ப, தங்கள் வருவாய்க்கு சர்வதேச மாணவர்களையே நம்பி இருந்த பிரித்தானிய பல்கலைக்கழகங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், care worker பணி செய்ய பிரித்தானியர்கள் அதிகம் முன்வருவதில்லைபோலும். பெரும்பாலும் வெளிநாட்டவர்கள்தான் முதியோர்களை கவனித்துக்கொள்ளும் அந்தப் பணியில் பெருமளவில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆனால், கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, பிரித்தானியாவுக்கு சுகாதாரப் பணிகள் மற்றும் care worker பணி செய்ய வருவதற்காக விசாவுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 80 சதவிகிதம் குறைந்து 2,900 ஆகிவிட்டது.
அத்துடன், ஏற்கனவே பிரித்தானியாவில் care worker பணி செய்துவந்த பலர், பிரித்தானியாவில் நிலவும் விரும்பத்தகாத புலம்பெயர்தல் சூழல் காரணமாக நாடு திரும்பிவிட்டார்கள் அல்லது சாதகமான புலம்பெயர்தல் சூழல் நிலவும் நாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள் என்கிறார் துறைசார் அமைப்பொன்றின் துணைத் தலைவரான Nadra Ahmed
இனி பிரித்தானியா care worker பணி செய்ய, தன் நாட்டு மக்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். ஆனால், அதற்கு காலம் பிடிக்கும்.
ஆக, புலம்பெயர்தல் விதிகளைக் கடுமையாக்கியதன் பலனை பிரித்தானியா அனுபவிக்கத் துவங்கியுள்ளது.
சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை சரிந்ததால் ஏற்பட இருக்கும் பொருளாதார பாதிப்பு ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம், care worker பணி செய்வோருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளதால், சுகாதாரத்துறையிலும் பாதிப்பு ஏற்பட உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |