விரைவில்... அகதிகளுக்கு நல்ல செய்தி ஒன்றைச் சொல்ல பிரித்தானியா திட்டம்
பிரித்தானிய அரசு, புலம்பெயர்தல் மற்றும் புகலிடம் வழங்குதல் தொடர்புடைய மசோதா ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
விரைவில் அகதிகளுக்கு ஒரு நல்ல செய்தி
அதாவது, கனடா அரசு, community sponsorship என்னும் திட்டத்தின் கீழ் அகதிகளுக்கு ஸ்பான்சர் செய்வதை அனுமதிக்கிறது.
அவ்வகையில், 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு, 400,000 அகதிகள் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

கனடாவில் அப்படி ஸ்பான்சர் செய்யப்பட்ட அகதிகள், நாட்டுடன் நல்ல முறையில் இணைந்து வாழ்வதுடன், அவர்களில் பெரும்பாலானோர், ஓராண்டுக்குள் வேலை தேடிக்கொள்வதும் தெரியவந்துள்ளது.
ஆக, கனடாவின் மாதிரியைப் பின்பற்றி பிரித்தானியாவும் அத்தகைய திட்டம் ஒன்றைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
அந்த திட்டத்தின்படி, தொண்டு நிறுவனங்கள், சபைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், பிரித்தானியா வர, அகதிகளுக்கு ஸ்பான்சர் செய்யலாம்.
அதே நேரத்தில், பிரித்தானியாவில் வாழ தகுதியற்றவர்கள் என கருதப்படுவோரை நாடுகடத்துவது தொடர்பிலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
இதற்கிடையில், இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளதால், ஒருவேளை, புகலிடம் தொடர்பில் பிரித்தானியாவின் பார்வை மாறிவிட்டதோ என நீங்கள் கருதுவீர்களானால், உண்மை அதுவல்ல!
அதாவது, பிரதமராக பதவி வகித்த கெய்ர் ஸ்டாமரை வீட்டு அனுப்ப முடிவு செய்துவிட்டார்கள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள். புதிதாக ஆன்டி பர்னாம் என்பவர் விரைவில் பிரதமராக பதவியேற்க இருக்கிறார்.
ஆக, ஸ்டார்மர் ஆட்சியில் ஏற்கனவே பதவியிலிருந்தவர்கள், தங்கள் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள முயன்றுவருகிறார்கள்.
உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதும் அதையேதான் செய்துவருகிறார். ஆக, தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, அவசர அவசரமாக இப்படி ஒரு புலம்பெயர்தல் மற்றும் புகலிடம் வழங்குதல் தொடர்புடைய மசோதாவை அறிமுகம் செய்ய ஷபானா முயற்சி செய்துவருகிறார் என்கின்றன பிரித்தானிய ஊடகங்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |