நெதன்யாகு பிரித்தானியாவில் கைதாவது உறுதி... கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கம் அதிரடி
இஸ்ரேல் பிரதமர் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என்றால் கைது செய்யப்படுவது உறுதி என கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
கைது செய்வது உறுதி
போர்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மீதும் கைதாணை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையிலேயே, நெதன்யாகு பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்டால் கைது செய்வது உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் ஹமாஸ் படைகள் மீதான இஸ்ரேலின் போரில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில்,
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக வியாழக்கிழமை கைதானை பிறப்பித்துள்ளது.
சட்டப்பூர்வ கடமைகளுக்கு இணங்கும்
இதன் அடிப்படையிலேயே பிரித்தானியாவும் நெதன்யாகு கைது தொடர்பில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் நெதன்யாகுவை பொலிசார் கைது செய்வார்களா என்ற கேள்விக்கு பதிலளிக்க பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார்.
ஆனால் பிரித்தானியா எப்பொழுதும் உள்நாட்டுச் சட்டம் மற்றும் சர்வதேசச் சட்டத்தின்படி அதன் சட்டப்பூர்வ கடமைகளுக்கு இணங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் 1998ல் பிரித்தானியா கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |