2040 ஆம் ஆண்டுக்குள் முதல் அணு இணைவு மின் ஆலை: பிரித்தானிய அமைச்சர் அறிவிப்பு
பிரித்தானியாவில் 2040ம் ஆண்டுக்குள் அணு இணைவு ஆற்றல் ஆலை கட்டப்படும்.
இது உலகிற்கு அணு இணைவு ஆற்றலின் வணிக நம்பிக்கையை நிரூபிக்கும்.
2040-ஆம் ஆண்டுக்குள் அணு இணைவு மின் நிலையத்தை பிரித்தானியா கட்டி முடிக்கும் என நாட்டின் வர்த்தக அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக்( Jacob Rees-Mogg) தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா மின்சாரம் மற்றும் எரிவாயு தேவைகளுக்கான புதிய ஆற்றலை தேடி வரும் நிலையில், 2040-ஆம் ஆண்டுக்குள் பிரித்தானிய முன்மாதிரி அணு இணைவு ஆற்றல் ஆலையை(nuclear fusion power plant) கட்டியெழுப்பும் என வர்த்தக அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக் திங்களன்று தெரிவித்துள்ளார்.
UKAEA
இது தொடர்பாக பர்மிங்காமில் நடைபெற்ற கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பேசிய ரீஸ்-மோக், பிரித்தானியாவின் முதல் முன்மாதிரி அணு இணைவு ஆற்றல் ஆலையை நாங்கள் உருவாக்க உள்ளோம், இது 2040 ஆம் ஆண்டளவில் கட்டப்பட இருக்கும் முதல் அணு இணைவு ஆற்றல் ஆலை வகையாகும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அமைப்பு மின் விநியோக அமைப்பான கம்பிச் சட்டத்தினுள் ஆற்றலை செலுத்தும் திறன் கொண்டது, அவ்வாறு செய்வதன் மூலம் இது உலகிற்கு அணு இணைவு ஆற்றலின் வணிக நம்பிக்கையை நிரூபிக்கும் என தெரிவித்துள்ளார்.
UKAEA
கூடுதல் செய்திகளுக்கு; உக்ரைன் போருக்கு மூன்று மகன்களை அனுப்பும் செச்சென் தலைவர்: பயிற்சி புகைப்படம் வெளியீடு
மத்திய பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம்ஷையரில் உள்ள நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு பதிலாக அதே பகுதியில் இந்த புதிய அணு இணைவு ஆற்றல் ஆலையானது கட்டப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
EPA