140 டன் ஆபத்தான புளூட்டோனியத்தை அப்புறப்படுத்த பிரித்தானியா முடிவு
பிரித்தானிய அரசாங்கம் தனது 140 டன்கள் அளவிலான ப்ளூட்டோனியத்தை அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளது.
தற்போது Cumbria-வில் உள்ள Sellafield-ல் உள்ள ஒரு பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 140 டன் கதிரியக்க புளூட்டோனியத்தை (radioactive plutonium) அப்புறப்படுத்தவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அணுசக்தி எரிபொருள் மறுசெயலாக்கத்தின் விளைபொருளான இந்த ஆபத்தான ப்ளூட்டோனியத்தை பிரித்தானியா உலகிலேயே அதிகளவு சேமித்து வைத்துள்ளது.
இது அந்த இடத்தில் வைக்கப்பட்டு பல தசாப்தங்களாக புதிய அணுசக்தி எரிபொருளாக மறுசுழற்சி செய்ய அனுமதிக்கும் வடிவத்தில் குவிந்து வருகிறது.
ஆனால் அரசாங்கம் இப்போது அதை மீண்டும் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.
அதற்கு பதிலாக இந்த அபாயகரமான பொருளை பாதுகாப்பாக வைக்க விரும்புவதாகவும், நிரந்தரமாக நிலத்தடியில் புதைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ப்ளூட்டோனியத்தை தற்போது உள்ள வடிவில் பாதுகாப்பது சவாலானது மற்றும் செலவழிவு அதிகம். இதன் கதிர்வீச்சு காரணமாக சேமிப்பு பெட்டகங்கள் அடிக்கடி மாற்றப்பட வேண்டியிருக்கும்.
அதேசமயம், ஆயுதத்துடன் காவலர்களால் பாதுகாக்கப்படுகிறது, இதற்கான செலவாக ஆண்டுதோறும் £70 மில்லியன் செலவாகிறது.
அரசாங்கம் ப்ளூட்டோனியத்தை ஒரு நிலையான, கல் போன்ற பொருளாக மாற்றும் புதிய உத்தியைக் கையாளவுள்ளது. இதற்காக செலஃபீல்டில் ஒரு புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயல்முறை மூலம் ப்ளூட்டோனியம் ஒரு திட, கதிர்வீச்சு குறைந்த மடிவற்ற செராமிக் பொருளாக மாற்றப்படும்.
அரசாங்கத்தின் முடிவு அணு கழிவுகளை நிரந்தரமாக மேலாண்மை செய்யும் புதிய பாதையை அமைக்கிறது. இருப்பினும், இந்த நுட்ப மற்றும் அரசியல் செயல்முறை முழுமை பெற 2050-க்குப் பின்னர்தான் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |