பெண்களை சீரழிப்போருக்கு ரசாயன முறை சிகிச்சை... விரைவில் பிரித்தானியா முழுவதும் அறிமுகம்
பிரித்தானியாவில், பெண்களை சீரழிப்போருக்கு ரசாயன முறை ஆண்மை நீக்கம் செய்யும் நடைமுறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பிரித்தானிய நீதித்துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.
பெண்களை சீரழிப்போருக்கு ரசாயன முறை சிகிச்சை
தென்மேற்கு இங்கிலாந்தில், பெண்களை சீரழிப்போருக்கு ரசாயன முறை ஆண்மை நீக்கம் செய்யும் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக நீதித்துறைச் செயலரான டேவிட் லேம்மி தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக வடமேற்கு மற்றும் வடகிழக்கு இங்கிலாந்திலும் இந்த நடைமுறை சோதனை முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது.
அவ்வகையில், சுமார் 6,400 குற்றவாளிகளுக்கு ரசாயன முறை ஆண்மை நீக்கம் செய்யப்பட உள்ளது.
விரைவில் பிரித்தானியா முழுவதும் உள்ள பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறை ஆண்மை நீக்கம் செய்யும் திட்டம் உள்ளதாகவும் நீதித்துறைச் செயலரான டேவிட் லேம்மி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |