மார்ச் மாதத்தில் 2 பனிப்புயல்களை சந்திக்கவுள்ள பிரித்தானியா - திகதிகள் அறிவிப்பு
பிரித்தானியாவை (UK) மார்ச் மாதத்தில் இரண்டு கடுமையான பனிப்புயல்கள் தாக்கும் என வானிலை முன்னறிவிப்பு காட்டுகிறது.
Met Desk மற்றும் WX Charts தரவுகளின் படி, பனிப்புயல்கள் மிகவும் கடுமையாக, சில இடங்களில் மணிக்கு 5cm வரை பனி பெய்யலாம்.
முதல் பனிப்புயல்: மார்ச் 3 முதல் மார்ச் 4 வரை
- மார்ச் 3-ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு முதல் பனிப்புயல் யார்க்ஷிர், லேக் டிஸ்டிரிக்ட், லங்காஷைர் ஆகிய பகுதிகளில் தொடங்கும்.
- வடக்கு வேல்ஸ் மற்றும் வடக்கு இங்கிலாந்தில் சிறிய அளவில் பனி தொடரலாம்.
- மார்ச் 4-ஆம் திகதி வரை பனிப்பொழிவு நீடிக்கலாம், ஆனால் அதன் பிறகு குறையும்.
இரண்டாவது பனிப்புயல்: மார்ச் 7 முதல் மார்ச் 8 வரை
- மார்ச் 7-ஆம் திகதி பிரித்தானியா முழுவதும் இரண்டாவது கடுமையான பனிப்புயல் தாக்கும்.
- மார்ச் 8-ஆம் திகதியுடன் பெரும்பாலான பகுதிகளில் பனிப்பொழிவு குறையும்.
குறுகிய கால வானிலை முன்னறிவிப்பின் படி, பிப்ரவரி 21 முதல் 25 வரை பல பகுதிகளில் மழை, பலத்த காற்று, மற்றும் கடுமையான காற்றழுத்தம் இருக்கும். கடலில் பெரும் காற்று வீசும் வாய்ப்பு உள்ளது.
வரும் நாட்களில் பிரித்தானியாவில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என்பதால், மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |