பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸ் செல்வோருக்கு முக்கிய தகவல்! இனி இது கட்டாயம் என அறிவிப்பு
பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸ் செல்வோர், 24 மணி நேரத்திற்குட்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளுடன் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. இந்தியாவின் உருமாறிய டெல்டரா கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் தன்மை கொண்டதால், மீண்டும் நோயின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது.
அந்த வகையில், பிரித்தானியாவில் சமீப நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அதைக் கட்டுப்படுத்த பிரித்தானியா அரசு தேவையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இதன் காரணமாக, பிரித்தானியாவில் இருந்து பிரான்சுக்கு வருவோர், 24 மணிநேரத்துக்குட்பட்ட PCR சோதனை, அதாவது கொரோனா இல்லை என்ற கொரோனா பரிசோதனை முடிவுகளுடன் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய விவகாரங்களுக்கான மாநில செயலாளர் Clément Beaune இது குறித்து கூறுகையில், பிரித்தானியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் செம்மஞ்சள் நிறத்தில் பிரித்தானியா வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், சுகாதார பாஸ் இல்லாதவர்கள் கடந்த 24 மணிநேரத்துக்கு உட்பட்ட PCR முடிவுகளுடன் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Parmi les pays ?, régime renforcé aussi pour le Royaume-Uni : pour les non vaccinés, un test de ➖ de 24 h est exigé au départ (en plus du motif impérieux) ???? https://t.co/iWM86mn2NJ
— Clement Beaune (@CBeaune) July 12, 2021
இதற்கு 72 மணிநேரங்களுக்கு உட்பட்ட PCR முடிவுகள் கோரப்பட்டிருந்த நிலையில் தற்போது, இந்த கால அவகாசம் 24 மணி நேரத்திற்குள்ளான சோதனை முடிவு கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,