வீட்டிலிருந்து வேலை பார்ப்பது தொடர்பில் பிரித்தானியா அரசு எடுக்க இருக்கும் முடிவு
Major change for anyone working from home announced: வீட்டிலிருந்து வேலை பார்ப்பது தொடர்பில் பிரித்தானிய அரசு முக்கிய முடிவொன்றை அறிவிக்க உள்ளது.
வீட்டிலிருந்து வேலை பார்க்கும் விடயத்தை எளிதாக்க, அல்லது, வீட்டிலிருந்து வேலை பார்க்க கோரும் பணியாளர்களின் கோரிக்கையை பணி வழங்குவோர் நிராகரிப்பதை கடினமாக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.
மீண்டும் அதிகாரம் வேலை செய்வோர் கையில்...
இந்த விடயம் குறித்து விளக்கிய பிரித்தானிய மாகாண முதன்மைச் செயலரான Louise Haigh, பணியாளர் ஒருவர் வீட்டிலிருந்தவண்ணம் வேலை பார்க்கக் கோரும்போது, பணி வழங்கும் நிறுவனம் அதை நிராகரிக்கவேண்டுமானால், பணியாளரின் கோரிக்கையை முறையாக கருத்தில் கொண்டதை நிரூபித்தாகவேண்டும்.

அதாவது, ஒருவர் தனது பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்துவரவேண்டியிருக்கலாம், மற்றொருவருக்கு, வயதான தன் பெற்றோரை பார்த்துக்கொள்ளவேண்டியிருக்கலாம்.
பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெற விரும்பும் கிராமம்: உள்துறைச் செயலரை கொந்தளிக்கவைத்துள்ள விடயம்
ஆக, இதையெல்லாம் கருத்தில் கொண்டே, வீட்டிலிருந்து வேலை செய்யக் கோரும் அவரது கோரிக்கை குறித்து அலுவலகம் முடிவு செய்யவேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என அவரது கோரிக்கையை நிராகரிக்க முடியாது.
எல்லா வகையான பணிகளையும் வீட்டிலிருந்து செய்ய முடியாது என்பது உண்மைதான், என்றாலும், பணியாளர் வீட்டிலிருந்து வேலை பார்க்க கோரும்போது அவரது கோரிக்கையை நிறுவனம் சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார் Louise Haigh.