புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியா முக்கிய முடிவு
Failed asylum seekers face removal without five day notice period: புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து நாட்களுக்கு முன் நாடுகடத்தல் குறித்து அறிவிக்கும் நடவடிக்கை ரத்து செய்யப்பட உள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தல் தொடர்பில், பிரித்தானியா அரசு முக்கிய முடிவொன்றை எடுக்க உள்ளது.
ரத்தாகும் Notice period
பிரித்தானியாவில் புகலிடம் கோரியவர்களின் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்படும் நிலையில், அவர்களை நாடுகடத்தும் முன், ஐந்து நாட்கள் notice period கொடுக்கப்படும்.

அதாவது, சம்பந்தப்பட்ட நபர் நாடுகடத்தப்பட இருப்பது குறித்து ஐந்து நாட்களுக்கு முன்பே அவருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
விடயம் என்னவென்றால், தாங்கள் நாடுகடத்தப்பட இருப்பது தெரியவந்ததும், உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்துவிடுகிறார்கள்.
அதனால், அவர்களை நாடுகடத்துவதில் தாமதம் அல்லது பிரச்சினை ஏற்படுகிறது.
ஆகவே, அந்த notice periodஐ ரத்து செய்ய பிரித்தானிய அரசு திட்டமிட்டுவருகிறது.
ஏற்கனவே புலம்பெயர்தல் மற்றும் புகலிட மசோதா சட்டமாகும் நடைமுறைகள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அந்த மசோதாவில், இந்த notice periodஐ ரத்து செய்யும் விடயத்தை இணைக்க இருக்கிறார் பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்.
அகதிகள் ஆதரவு தொண்டு நிறுவனங்கள், அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துவருகின்றன.