பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தால் கைது செய்து திருப்பி அனுப்பும் திட்டம்: சில நாட்களில் அமுல்
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சிறு படகுகள் மூலம் நுழைவோரை கைது செய்து, அவர்களில் சிலரை பிரான்சுக்கே திருப்பி அனுப்பும் திட்டம் சில நாட்களில் அமுலுக்கு வர உள்ளது.
இன்னும் சில நாட்களில்...
பிரித்தானியாவும் பிரான்சும் செய்துகொண்ட One in, one out என அழைக்கப்படும் ஒப்பந்தத்தின்படி, பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாய் வழியாக நுழைந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், தனக்கு பிரித்தானியாவில் குடும்பம் இருப்பதை நிரூபிக்க இயலாதபட்சத்தில், அவர் பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்படுவார்.
அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரித்தானியாவில் குடும்பம் உள்ளதை நிரூபிக்கக்கூடிய, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.
இன்னும் சில நாட்களில் அமுலுக்கு வர இருக்கும் இந்த திட்டம் 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அமுலில் இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |