பிரித்தானியாவில் வாழும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி
Home Secretary has scrapped plans to make foreign care workers already in the UK wait 15 years to qualify for permanent settlement: பிரித்தானியாவில் நிரந்தரமாக குடியமர, வெளிநாட்டவர்கள் இனி 15 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்னும் விதியிலிருந்து, முதியவர்களை கவனித்துக்கொள்ளும் பணியை மேற்கொள்ளும் பணியாளர்களில் ஒரு பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வாழும், லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ஷபானாவின் திட்டம் ரத்து
உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், தொடர்ச்சியாக புலம்பெயர்தலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருவது அனைவரும் அறிந்ததே.

அவற்றில் ஒன்று, ஏற்கனவே பிரித்தானியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்து, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான ஒரு விதி!
அதாவது, ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால், அதன் பின் காலவரையறையின்றி வாழ தகுதி பெறலாம் என இருந்த விதியை மாற்றி, இனி 15 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம் என்னும் ரீதியிலான புது விதி ஒன்றை ஷபானா அறிவிக்க, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
ஆனால், அந்த விதியிலிருந்து முதியவர்களை கவனித்துக்கொள்ளும் பணியை மேற்கொள்ளும் care workers என்னும் பணியாளர்களுக்கு, அதாவது, ஏற்கனவே பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோருக்கு, விலக்கு அளிப்பது என பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆன்டி பர்னாம் முடிவு செய்தார்.
அதன்படி, ஷபானாவின் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது!
பழைய விதியும், புதிய விதியும்...
பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்கள், 5 ஆண்டுகளுக்குமேல் பிரித்தானியாவில் வாழ்ந்திருந்தால், அதன்பின் காலவரையறையின்றி வாழ தகுதி பெறலாம் என்பது பழைய விதி.

அதை மாற்றி, இனி 15 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால் மட்டுமே காலவரையறையின்றி வாழ தகுதி பெறலாம் என்னும் ரீதியிலான புது விதி ஒன்றை ஷபானா அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
ஷபானாவின் இந்த திட்டத்துக்கு பிரதமர் ஆன்டி பர்னாம் உட்பட, லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அதைத் தொடர்ந்து, ஷபானா முன்வைத்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆக, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பிரித்தானியாவில் வாழும் care worker பணி செய்யும் வெளிநாட்டவர்கள், 5 ஆண்டுகளுக்குமேல் பிரித்தானியாவில் வாழ்ந்திருந்தால், அதன்பின் காலவரையறையின்றி வாழ தகுதி பெறலாம் என்னும் விதியே இனிமேலும் நீடிக்க உள்ளது.
இதனால், ஷபானாவின் புதிய விதி குறித்து அறிந்து ஏமாற்றமடைந்திருந்த care worker பணி செய்யும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர், தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.