ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனில் களமிறங்கும் பிரித்தானிய டாங்கிகள்: பிரதமர் ரிஷி சுனக் அதிரடி
ரஷ்யாவிற்கு எதிரான போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக சேலஞ்சர் 2 டாங்கிகள் வழங்குவதை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உறுதிப்படுத்தியுள்ளார்.
நீடிக்கும் போர்
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கைகள் 10 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போரின் ஆரம்ப நாட்களில் ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைனிய ஆயுதப் படையினர் மீட்டு எடுக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் போரில் உக்ரைனுக்கு இராணுவ ஆதரவை வழங்கும் பிரித்தானியா உட்பட சுமார் 50 நாடுகளின் அமெரிக்க தலைமையிலான குழு அதன் அடுத்த கூட்டத்தை ஜனவரி 20 அன்று நடத்த உள்ளது.
Reuters
இந்த கூட்டத்தில் உக்ரைனுக்கு டாங்கிகள் போன்ற புதிய ராணுவ உதவிகள் வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேலஞ்சர் 2 டாங்கிகள்
இந்நிலையில் ரஷ்ய ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிரான போர் முயற்சியை வலுப்படுத்த பிரித்தானியா உக்ரைனுக்கு சேலஞ்சர் 2 டாங்கிகளை அனுப்ப உள்ளது.
பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையே இன்று நடந்த அழைப்பைத் தொடர்ந்து, டவுனிங் ஸ்ட்ரீட் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட தகவலில், "சேலஞ்சர் 2 டாங்கிகள் மற்றும் கூடுதல் பீரங்கி அமைப்புகளை வழங்குவதன் மூலம் உக்ரைனுக்கு ஆதரவைத் தீவிரப்படுத்துவதற்கான பிரித்தானியாவின் லட்சியத்தை பிரதமர் ரிஷி சுனக் கோடிட்டுக் காட்டினார் என தெரிவித்துள்ளார்.
AFP
அத்துடன் இரண்டு தலைவர்களும் உக்ரைனில் ரஷ்யாவின் தற்போதைய போரின் நிலையைப் பிரதிபலித்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் பிரித்தானியாவின் இந்த முடிவு பிற நோட்டோ நாடுகளையும் குறிப்பாக ஜெர்மனி போன்ற நாடுகளையும் உக்ரைனுக்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் பின்பற்றத் தூண்டும் என உக்ரைனிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.