One in, one out ஒப்பந்தம்: முதன்முறையாக பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் புலம்பெயர்ந்தோர்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் கீழ், பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் செய்யப்பட்டுள்ள One in, one out ஒப்பந்தத்தின்படி, இந்த வாரம் முதன்முறையாக புலம்பெயர்ந்தோர் சிலர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளார்கள்.
One in, one out ஒப்பந்தம்
பிரித்தானியாவும் பிரான்சும் செய்துகொண்ட இந்த One in, one out என்னும் ஒப்பந்தம் என்பது என்னவென்றால், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாய் வழியாக சட்டவிரோதமாக நுழைந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்படுவார்.
அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.
நிபந்தனை என்னவென்றால், அவர் இதற்கு முன் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றவராக இருக்கக்கூடாது!
இந்த திட்டத்தின்கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக, ஆகத்து மாதம் 6ஆம் திகதி முதன்முறையாக புலம்பெயர்ந்தோர் சிலர் கைது செய்யப்பட்டார்கள்.
அவர்கள் இந்த வாரம் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த One in, one out ஒப்பந்தம் 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அமுலில் இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |