மில்லியன் செல்போன்களுக்கு வர உள்ள அவசர எச்சரிக்கை - திகதி அறிவித்த பிரித்தானிய அரசு
தீ விபத்து, வெள்ளம் போன்ற உயிருக்கு ஆபத்தான பேரிடர் காலங்களில் பொதுமக்களை எச்சரிக்க, செல்போன்களுக்கு அரசு சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
அனைத்து செல்போன்களுக்கும் முறையாக இந்த எச்சரிக்கை செய்தி செல்கிறதா என பரிசோதிக்க அவ்வப்போது அரசு சோதனையாக இந்த குறுஞ்செய்திகளை அனுப்பும்.
அவசர எச்சரிக்கை சோதனை
அதேபோல், பிரித்தானியவில், வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி மாலை 3 மணியளவில் இந்த அவசர எச்சரிக்கை சோதனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், மில்லியன் கணக்கான மொபைல் சாதனங்கள் 100 வார்த்தைகளுக்கும் குறைவான குறுஞ்செய்தியைப் பெறும். மேலும் தொலைபேசிகளில் இருந்து சுமார் 10 வினாடிகள் உரத்த சைரன் மற்றும் அதிர்வு வரும்.
நாட்டில், 4G மற்றும் 5G நெட்ஒர்க் பயன்படுத்தும் அனைவரின் செல்போனுக்கு இந்த எச்சரிக்கை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் வீட்டில் உள்ள தீ எச்சரிக்கையைப் போலவே, தேவைப்பட்டால் அது செயல்படும் என்பதை நாங்கள் அறிந்துகொள்ளும் வகையில் அமைப்பைச் சோதிப்பது முக்கியம்" என்று அமைச்சரவை அமைச்சர் பாட் மெக்ஃபேடன்(Pat McFadden) கூறினார்.
கடந்த ஆண்டுகளில், 5 முறை இவ்வாறாக அவசர எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2024 இல் பிளைமவுத்தில் வெடிக்காத இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது, ஜனவரி மாதம் இயோவின் புயல், 2024 ஆம் ஆண்டு டாராக் புயல் ஆகிய கலகட்டங்களில் இந்த அவசர எச்சரிக்கை அனுப்பப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |