ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு கவலையை உருவாக்கியுள்ள பிரித்தானியாவின் செய்தி
பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள் பலருக்கு, பிரித்தானியாவில் வாழ உரிமையில்லை என்னும் செய்தி அளிக்கப்படலாம்.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பலர், பல ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.
ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு...
முன்னர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்ததும், 2020ஆம் ஆண்டு அது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் ஐரோப்பிய ஒன்றியத்தவர்களான பலருக்கு, உள்துறை அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், உங்களுக்கு, ’பிரெக்சிட்டுக்குப் பின் பிரித்தானியாவில் வாழ்வதற்கான உரிமைகள் தவறுதலாக வழங்கப்பட்டுவிட்டது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் பிரெக்சிட்டுக்கு முன்பிருந்தே பிரித்தானியாவில் வாழ்ந்துவருபவர்கள். தங்களது ’pre-settled status’ என்னும் நிலை, ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்துவந்ததைத் தொடர்ந்து ’settled status’ என்னும் நிரந்தர நிலையாக மாறிவிடும் என அவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால், அப்படி அவர்கள் நம்பிக்கையுடன் இருந்த நேரத்தில், அவர்களுக்கு ஏற்கனவே பிரித்தானியாவில் வாழ கொடுக்கப்பட்ட உரிமைகள் தவறுதலாக கொடுக்கப்பட்டுவிட்டது என உள்துறை அலுவலகம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
தங்கள் வேலை, தங்கள் வங்கிக் கணக்குகள், தங்கள் பிள்ளைகளின் படிப்பு என பல விடயங்களை இந்த கடிதம் மாற்றிவிடக்கூடும் என்பதால் அவர்கள் கவலை அடைந்துள்ளார்கள்.
தற்போதைக்கு இப்படி சிலருக்கு கடிதம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மேலும் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஐரோப்பிய ஒன்றியத்தோர் இதே நிலையை எதிர்கொள்ளக்கூடும் என தொண்டு நிறுவனங்கள் கருதுகின்றன.
விடயம் என்னவென்றால், இதே நிலைமையில், 1.3 மில்லியன் ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள் பிரித்தானியாவில் வாழ்ந்துவருவதால், அவர்களில் எத்தனை பேர் இப்படி பாதிக்கப்படப்போகிறார்கள் என்பது இப்போதைக்கு தெரியவில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |