பிரித்தானியாவில் பெரிய வீடு வைத்திருப்பவர்களுக்கு உருவாகியுள்ள சிக்கல்
பிரித்தானியாவில், 2 மில்லியன் பவுண்டுகளுக்கு அதிகமான மதிப்புடைய வீடுகளுக்கு கூடுதல் வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதிக மதிப்புடைய வீடுகளுக்கு கூடுதல் வரி
2026ஆம் ஆண்டில் 2 மில்லியன் பவுண்டுகளுக்கு அதிகமான மதிப்புடைய வீடுகள் வைத்திருப்பவர்களுக்கு, 2028ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், கூடுதல் வரி விதிக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டில், அரசு அமைப்பு ஒன்று, வீடுகளின் மதிப்பைக் கணக்கிட உள்ளது.
அதைத் தொடர்ந்து, 2 முதல் 2.5 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய வீடுகள் வைத்திருப்போருக்கு ஆண்டொன்றிற்கு 2,500 பவுண்டுகளும், 5 மில்லியன் மற்றும் அதற்கு அதிக மதிப்புடைய வீடுகள் வைத்திருப்போருக்கு 7,00 பவுண்டுகளும் உப கட்டணம் விதிக்கப்படும்.
இந்த வரிவிதிப்பு 2028 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமுலுக்கு வரும்.
நாட்டில் நீண்டகாலமாக மக்களுடைய நிதி நிலைமையில் பெரும் வித்தியாசம் நிலவிவருகிறது. அதை எதிர்கொள்வதற்காகவே இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |