பிரித்தானிய பிரதமர் ரிஷிக்கு அடுத்த அடி... கவலையை ஏற்படுத்தியுள்ள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்
இங்கிலாந்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில், நீண்ட காலமாக கன்சர்வேட்டிவ் கட்சி வசம் இருந்த இரண்டு இருக்கைகளை அக்கட்சி லேபர் கட்சியிடம் பறிகொடுத்துள்ளது.
பொதுத்தேர்தல் நெருங்கும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சி சந்தித்துவரும் தோல்விகள், அக்கட்சியினருக்கு கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.
பிரித்தானிய பிரதமர் ரிஷிக்கு அடுத்த அடி...
இங்கிலாந்திலுள்ள Wellingborough மற்றும் Kingswood ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, அத்தொகுதிகளில் வியாழக்கிழமை உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் முடிவுகள், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளன. பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொடர்ந்து அக்கட்சி உள்ளாட்சித் தேர்தல்களில் தோல்வியை சந்தித்துவருவது கட்சியினருக்கு கவலையை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே அடுத்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி முக்கால்வாசி இருக்கைகளை இழக்கும் என கருத்துக் கணிப்புகள் கூறியுள்ள நிலையில், சமீபத்திய தோல்விகள் பிரதமர் ரிஷிக்கு பெரும் அடியாக அமைந்துள்ளதை மறுப்பதற்கில்லை.
14 ஆண்டுகளாக ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சி, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே செல்வாக்கை இழந்துவரும் அதே நேரத்தில், பிரித்தானியாவின் இரண்டாவது பெரிய கட்சியான லேபர் கட்சி, மெதுவாக கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்டைகளான இருக்கைகளை ஒவ்வொன்றாக கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |