தெற்கு இங்கிலாந்தில் கனமழை எச்சரிக்கை: வசந்தகால வறட்சிக்கு பிறகு வானிலை மாற்றம்
பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை எச்சரிக்கை
தென் இங்கிலாந்தில் கடும் வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சூறாவளி ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வசந்த காலத்தின் தொடக்கம் வழக்கத்திற்கு மாறாக வறண்டிருந்த நிலையில், இது கோடையில் வறட்சிக்கு வழிவகுக்குமோ என்ற கவலையை எழுப்பியிருந்தது.
வானிலை ஆய்வு மையத்தின் (Met Office) வானிலை ஆய்வாளர் அலெக்ஸ் பர்கில் கூறுகையில், இங்கிலாந்தின் வடக்குப் பகுதிகளில் நல்ல சூரிய வானிலை நிலவும் நிலையில், தென் கிழக்குப் பகுதிகளில் "ஃபனல் கிளவுட் (funnel cloud) அல்லது ஒரு சிறிய சூறாவளி" கூட ஏற்படக்கூடும், குறிப்பாக புதன்கிழமை அன்று. தென் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும், தொடர் மழையும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத வறட்சி
கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவு வறண்ட வசந்த காலத்திற்குப் பிறகு தற்போது மழை பெய்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 2025 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் இங்கிலாந்தில் வெறும் 80.6 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது.
இது 1852 ஆம் ஆண்டு பதிவான 100.7 மி.மீ என்ற குறைந்தபட்ச மழை அளவை நெருங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் நிறுவனம் (Environment Agency) ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, நீண்ட காலத்திற்கு மழை இல்லாத நிலை தொடர்ந்தால், இந்த குறைந்த மழைப்பொழிவு இந்த கோடையில் இங்கிலாந்து முழுவதும் வறட்சிக்கு கணிசமாக வழிவகுக்கும் என அது தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |