பெண் உறுப்பினர் அருகிலேயே நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.!
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர் பக்கத்தில் இருக்கும்போதே பழமைவாத கட்சியின் எம்.பி. ஒருவர் ஆபாச படம் பார்த்து சிக்கியுள்ளார்.
ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் போனில் ஆபாச படத்தைப் பார்த்ததாக டோரி எம்.பி. ஒருவர் மீது, அருகில் அமர்ந்தியிருந்த பெண் உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார். யார் என்று பெயர் குறிப்பிடப்படாத நிலையில், அவர் முன்வரிசை உறுப்பினர் என்று கூறப்படுகிறது.
அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியில் இன்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. காமன்ஸ் மற்றும் கமிட்டி கூட்டத்தின் போது அவர் ஆபாசத்தைப் பார்ப்பது இது முதல் முறை அல்ல என்று அந்த பெண் மந்திரி கூறியுள்ளார்.
மேலும், அவர் தனது போனில் வீடியோ பார்ப்பதை ஆதாரத்திற்காக படம் எடுக்க முயன்றதாகவும், அனால் முடியவில்லை என்றும் மற்றொரு எம்.பி. கூறினார்.
பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியினர் நேற்று இரவு இது குறித்து 'அதிக குற்றச்சாட்டு கொண்ட கூட்டத்திற்கு' கூடியதாக கூறப்படுகிறது. அப்போது, பத்துக்கும் மேற்பட்ட பெண் எம்.பி.க்கள் சக ஊழியர்களிடம் இருந்து பாலியல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பகிர்ந்து கொண்டனர்.
ஜான்சனின் அமைச்சரவையில் உள்ள மூன்று உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 56 எம்.பி.க்கள் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. க
ன்சர்வேடிவ் கட்சியின் தலைமைக் கொறடா கிறிஸ் ஹீட்டன்-ஹாரிஸ் இன்று ஒரு அறிக்கையில், காமன்ஸ் சேம்பரில் டோரி ஆபாசத்தைப் பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாகக் கூறினார்.