இமயமலையில் ஆபத்தான மலையேற்றம்: பிரித்தானியாவின் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு
இமயமலையில் மலையேற்றத்தின் போது பிரித்தானியாவின் சுற்றுலாப் பயணி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு
இந்தியாவின் தர்மசாலாவில் உள்ள தத்ரி கிராமத்திற்கு அருகில் இமயமலையின் சவாலான நிலப்பரப்பில் தனது நண்பருடன் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது பிரித்தானியாவின் சுற்றுலாப் பயணி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
உள்ளூர் அவசர கால சேவைகள் வழங்கிய தகவலின் படி, மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், காயமடைந்த மலையேற்ற வீரர் மலையிலிருந்து மீட்கப்பட்டு சுமார் 24 மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவமனையில் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் மலையேற்றத்தில் ஈடுபட்ட இரண்டு பேரில் ஒருவர் படுகாயமடைந்ததாகவும், உயிரிழந்தவர் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உதவி வழங்குவதாகவும், இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் உறுதிப்படுத்தியது.
காங்க்ரா மாவட்டத்தில் அதிக உயரத்தில் மலையேற்றத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் இரண்டு சுற்றுலாப் பயணிகளும் அதை அறியவில்லை என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |