மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைகிறதா பிரித்தானியா? அமைச்சர் விளக்கம்
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா செய்துகொள்ளவிருக்கும் ஒப்பந்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
பிரதமர் பிரெக்சிட்டுக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும், மீன் பிடி தொழிலுக்கு அபாயம் ஏற்பட உள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் கூறிவருகிறார்கள்.
ஆக, பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைகிறதா என்னும் கேள்வியும் பலர் மனதிலும் எழுந்துள்ளது.
அமைச்சர் விளக்கம்
அந்த கேள்விக்கு விளக்கமளித்துள்ள தொழில் துறை அமைச்சரான சாரா ஜோன்ஸ், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்வதால், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதாக அர்த்தம் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தால் வரி செலுத்தும் மக்களுக்கு ஏற்படும் செலவைவிட, நமக்கு கிடைக்கவிருக்கும் பொருளாதார நன்மைகள் அதிகம் என்று கூறியுள்ளார் சாரா.
சந்தைகளை அணுகுவதற்கு நாம் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறியுள்ள சாரா, நாம் கட்டணம் செலுத்தவும் இல்லை, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
நாம் இப்போது ஐரோப்பிய ஒன்றிய படகுகளுக்கு எந்த அளவுக்கு மீன் பிடிக்க அனுமதியளித்துள்ளோமோ, அதே அளவில்தான் இனியும் மீன் பிடிக்க அனுமதிக்கப்போகிறோம், அந்த அளவு அதிகரிக்கப்போவதில்லை என்கிறார் அவர்.
மீன் பிடிப்பது மட்டுமல்ல, அதை விற்பதும் முக்கியம் என்று கூறும் சாரா, நாம் பிடித்த மீன்கள் நம் துறைமுகத்திலேயே அழுகிப்போவதைவிட, அவை விற்பனை செய்யப்படுவதுதானே முக்கியம்.
எனவே, நாம் ஐரோப்பிய நாடுகளுக்கு மீன் பிடிக்க அனுமதியளிக்கும் அதே நேரத்தில் நமது மீன்களை அவர்களுக்கு ஏற்றுமதி செய்யப்போகிறோம். அதனால் நமக்கு லாபம்தானே என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |