பிரித்தானிய சாலையில் இறந்து கிடந்த 18 வயது இளைஞர்: பொதுமக்களுடன் பொலிஸார் வேண்டுகோள்
பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள டிராஃபோர்டில் பூத் சாலையில் 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் இறந்து கிடந்த இளைஞர்
பிரித்தானியாவில் கிரேட்டர் மான்செஸ்டரின் டிராஃபோர்டில் பகுதியில் உள்ள (Trafford) பூத் சாலையில் அதிகாலை 5 மணியளவில் 18 இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் அவசர கால மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட இளைஞரை ஆராய்ந்ததில் 18 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.
மேலும் இந்த சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்று பொலிஸார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் பல்வேறு வகையான நோக்கில் இருந்து விசாரணை நடந்து வருவதாகவும் பொலிஸார் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் துப்பறியும் நபர்கள் இந்த சம்பவம் தொடர்பாக விவரம் தெரிந்த யாரேனும் இருந்தால் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |