பிரித்தானிய இரயிலில் 3 இளம்பெண்கள் அருகே சென்று ஆண் ஒருவர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்! புகைப்படத்துடன் பின்னணி
பிரித்தானியாவில் இரயிலில் அருகருகே உட்கார்ந்திருந்த மூன்று இளம்பெண்களிடம் பாலியல் ரீதியான கருத்துகளை கூறி வன்கொடுமை தாக்குதல் நடத்திய நபர் தொடர்பில் முக்கிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
கிரேட் மான்செஸ்டரில் தான் இந்த சம்பவம் கடந்த மாதம் 28ஆம் திகதி நடந்துள்ளது. Huyton மற்றும் St Helens station இடையில் சென்று கொண்டிருந்த இரயிலில் அன்றைய தினம் இரவு 8.40 மணியளவில் மூன்று இளம்பெண்கள் அருகருகே உட்கார்ந்திருந்தனர்.
அப்போது அவர்கள் அருகில் வந்து உட்கார்ந்த நபர் ஒருவர் அப்பெண்களிடம் பாலியல் ரீதியான முகம் சுழிக்கும் கருத்துகளை கூறி பாலியல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியுள்ளார்.
இந்த நிலையில் இதில் தொடர்புடைய நபரின் புகைப்படத்தை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர். அவரிடம் இந்த சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்கள் இருக்கும் என பொலிசார் கருதுகின்றனர்.
இது தொடர்பான பொலிசாரின் அறிக்கையில், புகைப்படத்தில் உள்ளவரை அடையாளம் தெரிகிறதா? இரயிலில் மூன்று பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடந்துள்ளது.
அது தொடர்பாக அவரிடம் தகவல் இருக்கலாம், யாருக்காவது அவரை தெரிந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.