வெளிநாடொன்றில் பரவும் வைரஸ் தொற்று: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை
சீனாவில், சுமார் 10,000 பேர் சிக்குன்குனியா என்னும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோர் சிக்குன்குனியா தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கும்படி பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை
பிரித்தானியாவில் 73 பேருக்கு சிக்குன்குனியா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடு சுற்றுலாப்பயணம் சென்று திரும்பியவர்கள்தான்.
பிரித்தானியாவைப் பொருத்தவரை இங்கு சிக்குன்குனியாவை பரப்பும் கொசுக்கள் இல்லை என்றும், ஆகவே, இங்கு ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு கொசுக்கடி மூலம் சிக்குன்குனியா பரவாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆக, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோர் கொசுக்கடியிலிருந்து தப்பும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
உடலை முழுமையாக மூடும் வகையில் உடைகள் அணிதல், mosquito repellent பூசிக்கொள்தல், கொசு வலைகளுக்குள் தூங்குதல் போன்ற சின்ன விடயங்கள், கொசுக்கடி மூலம் சிக்குன்குனியா பரவும் அபாயத்தை பெருமளவில் குறைக்கும் என்கிறார்கள் அவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |