மூன்று நாடுகள் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை
பிரித்தானிய வெளியுறவு அலுவலகம், மூன்று நாடுகள் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
மூன்று நாடுகள் தொடர்பில் பயண எச்சரிக்கை
பிரித்தானிய வெளியுறவு அலுவலகம், ஜேர்மனி, போலந்து மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகள் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த பயண எச்சரிக்கை, போலந்து நாடு தனது அண்டை நாடுகளுடன் எல்லைக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது தொடர்பானதாகும்.
அதாவது, ஜேர்மனி புலம்பெயர்வோரை போலந்து நாட்டுக்குள் அனுமதிப்பதாக வலதுசாரி அமைப்புகள் குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளன.
ஆகவே, போலந்தை ஆளும் வலதுசாரி அரசு, போலந்துக்கும் ஜேர்மனிக்கும் இடையில் அமைந்துள்ள 52 இடங்கள் மற்றும் லிதுவேனியா எல்லையிலுள்ள 13 இடங்களில் திங்கட்கிழமை முதல் பாதுகாப்புச் சோதனைகளை அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கனவே ஜேர்மனி தனது எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது.
ஆக, இந்த மூன்று நாடுகளுக்கும் சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், எல்லைகளில் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
எனவேதான், இந்த மூன்று நாடுகளுக்கும் செல்லும் பிரித்தானியர்களுக்கு வெளியுறவு அலுவலகம் விடுத்துள்ள பயண எச்சரிக்கையில், இந்த நாடுகளுக்குச் செல்லும்போது, எல்லைகளில் உங்கள் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, ஆவணங்கள் சரிபார்க்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த மூன்று நாடுகளுக்கும் பிரித்தானியர்கள் அதிக அளவில் சுற்றுலா செல்வதுண்டு.
லிதுவேனியாவுக்கு, ஆண்டுக்கு சராசரியாக 83,000 பிரித்தானியர்களும், போலந்துக்கு 600,000 பேரும் சுற்றுலா செல்வதுண்டு.
ஜேர்மனியைப் பொருத்தவரையிலோ, 2024ஆம் ஆண்டு நிலவரப்படி சுற்றுலா சென்ற பிரித்தானியர்கள் எண்ணிக்கை 5.3 மில்லியன் ஆகும்.
ஆக, பிரித்தானியர்கள் சமீபத்திய பயண ஆலோசனைகள் குறித்து தெரிந்து வைத்துக்கொள்வதுடன், இந்த நாடுகளுக்குச் செல்லும்போது பாதுகாப்புச் சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், அதற்கு தயாராக பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |