ரஷ்யாவை எதிர்த்து எஸ்டோனியாவில் களமிறங்கிய 1600 பிரித்தானிய வீரர்கள்!
பிரித்தானியாவில் இருந்து சுமார் 1600 ராணுவ வீரர்கள் தற்போது எஸ்டோனியாவுக்கு சென்றுள்ளனர்.
நேட்டோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 1600 பிரித்தானிய வீரர்கள் ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவில் ரஷ்ய எல்லையில் இருந்து 70 மைல் தொலைவில் உள்ள தாபா இராணுவ தளத்தில் களமிறங்கியுள்ளனர்.
ரஷ்யா ஒருவேளை உக்ரைன் மீது இரசாயன குண்டுகளை வீசத் தொடங்கினால், அல்லது பால்டிக் நாடான எஸ்டோனியா மீது படையெடுக்க தொடங்கினாலோ உடனடியாக பதில் தாக்குதல் நடத்தும் வகையில் அவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ஆல்கஹால், கடல் உணவுகளுக்கு தடை: ரஷ்யா மீது சுவிஸ் புதிய தடைகள் அறிவிப்பு
Image: PA
நேட்டோ போர்க் குழுவிற்கு தலைமை தாங்கும் லெப்டினன்ட் கர்னல் ரு ஸ்ட்ரீட்ஃபீல்ட், விளாடிமிர் புடின் எஸ்டோனியா மீது படையெடுப்பிற்கு உத்தரவிட்டால், அவரது படைகள் 100 சதவீதம் தயாராக இருப்பதாகக் கூறினார் என்று கூறினார்.
எக்சர்சைஸ் போல்ட் டிராகன் (Exercise Bold Dragon) என்று அழைக்கப்படும் தாபா இராணுவ தளத்தில் ஒரு பெரிய அளவிலான பயிற்சியில், பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள், கவச காலாட்படை, பொறியாளர்கள், பீரங்கி மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட டாங்கிகளைப் பயன்படுத்தி பிரித்தானியா, பிரஞ்சு, டேனிஷ் மற்றும் எஸ்டோனிய அணிகளைச் சேர்ந்த சுமார் 2,300 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்தோனிய அதிகாரிகள், விளாடிமிர் புடின் ஒரு நாள் தங்கள் நாட்டிற்கு படையெடுப்பார் என்று கூறியுள்ளனர்.
Image: PA