சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த மேலும் ஒரு நாட்டுடன் பிரித்தானியா ஒப்பந்தம்
சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படத் துவங்கியுள்ள பிரித்தானிய அரசு, அது தொடர்பாக மேலும் ஒரு நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.
ஏற்கனவே செயப்பட்டுள்ள ஒப்பந்தங்கள்
சிறு படகுகளில் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவோரைக் கட்டுப்படுத்துவதற்காக, ஏற்கனவே பிரித்தானியா பிரான்சுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.
சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவது தொடர்பில் ருவாண்டா நாட்டுடனும் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
Yahoo News UK
மேலும் ஒரு நாட்டுடன் ஒப்பந்தம்
இந்நிலையில், சட்ட விரோத புலம்பெயர்தலுக்கு உதவும் கடத்தல் கும்பல்களை சீர்குலைப்பதற்காக துருக்கி நாட்டுடனும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளது பிரித்தானியா.
எதற்காக இந்த ஒப்பந்தம்?
நேற்று இரவு, துருக்கி தேசிய பொலிசார், பிரித்தானிய அரசின் ஆதரவுடன் ’centre of excellence’ என்னும் மையம் ஒன்றை அமைப்பது தொடர்பில் பிரித்தானிய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Photograph: Dimitar Dilkoff/AFP/Getty Images
அந்த மையம் அமைக்கப்படுவதன் நோக்கம், பிரித்தானிய தேசிய குற்றவியல் ஏஜன்சி மற்றும் உள்துறை அலுவலக உளவுத்துறை ஊழியர்களுடன் துருக்கியும் இணைந்து மனிதக் கடத்தல் கும்பல்களை கட்டுப்படுத்துவதாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |