பிரித்தானியாவில் இன்று அதிகாலை நடந்த பயங்கரம்! 2 சிறுவர்கள் கொலை: 8 பேர் கைது
பிரித்தானியாவில் இன்று அதிகாலையில் இரண்டு டீனேஜ் சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில், Brentwood நகரத்தில் உள்ள Regency Court பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில், ஒரு கும்பலால் 3 பேர் கொடூரமாக தாக்கப்பட்டு ஆபத்தில் இருப்பதாக Essex எசெக்ஸ் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு அவரச உதவிகளுடன் சென்ற பொலிஸார், பாதிக்கப்பட்ட்டவர்களை காப்பாற்ற முயற்சித்த போதிலும், அவர்களில் இரண்டு டீனேஜ் சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Picture: Almy Live News
மூன்றாவது பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு காயங்களுக்கு சிகிச்சை பெற்றார். தற்போது அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பெரிய சம்பவம்' என வர்ணிக்கப்படும் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இன்று காலை அந்த வீதி பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசாரணை நடத்தியதில், இந்த கொலைகளை செய்திருக்கலாம் எனற சந்தேகத்தின் பேரில் 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Picture: Almy Live News
நீல நிற தடயவியல் கூடாரத்துடன் குறைந்தது ஒன்பது பொலிஸ் கார்கள் சம்பவ இடத்தில் காணப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக துப்பறியும் தலைமை ஆய்வாளர் ஆண்டி கிளார்க்சன் (Andy Clarkson) கூறுகையில்:
"இந்த சம்பவத்திற்கு உடனடி மற்றும் பெரிய அளவிலான பதில் தேவைப்படுகிறது. மேலும் இந்த துயர சம்பவத்திற்கு முன் என்ன நடந்தது என்பதை சரியாக கண்டுபிடிக்க அதிகாரிகள் மற்றும் புலனாய்வாளர்கள் இரவு முழுவதும் உழைத்துள்ளனர். எங்கள் விசாரணை இன்று முழுவதும் தொடரும்.
Picture: Essex Police
இத்தகைய துயரமான உயிரிழப்புக்குப் பிறகு சமூகத்தில் இயல்பாகவே அதிர்ச்சியும் கவலையும் இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், இந்த கட்டத்தில், பொதுமக்களுக்கு எந்த ஒரு பரந்த அச்சுறுத்தலும் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை.
இந்தச் சம்பவத்திற்கு ஏராளமான சாட்சிகள் இருப்பதை நாங்கள் அறிவோம், மத்திய பிரென்ட்வுட்டில் உள்ள ரீஜென்சி கோர்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளிலும் அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 2 மணி வரை சந்தேகத்திக்கும்படி எதையும் பார்த்தவர்கள் எங்களிடம் முன் வந்து பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Picture: Essex Police