பிரித்தானியாவில் குறைந்துள்ள வேலையின்மை விகிதம்: இங்கிலாந்து வங்கிக்கு அதிகரிக்கும் தலைவலி
பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் 3.6% குறைந்துள்ளது.
இது இங்கிலாந்து வங்கியின் பணவீக்க தலைவலியை அதிகரிக்கும் எனத் தகவல்.
பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் இந்த ஆண்டு ஜூலை முதல் மூன்று மாதங்களில் 3.6% குறைந்து இருப்பதாக வியாழக்கிழமை வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
உலக அளவில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் போன்ற காரணங்களால் பிரித்தானியாவில் கடுமையான வேலையின்மை மற்றும் வாழ்க்கை செலவு நெருக்கடி போன்றவை உயர்ந்து வருகிறது.
We've published People aged 65 years and over in employment, UK: January to March 2022 to April to June 2022 https://t.co/btHzYoNoFM
— Office for National Statistics (ONS) (@ONS) September 12, 2022
இந்நிலையில் வியாழக்கிழமை வெளியாகியுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், இந்த ஆண்டு ஜூலை முதல் மூன்று மாதங்களில் பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் 3.6% குறைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த வேலையின்மை வீழ்ச்சி விகிதம் 1974 க்குப் பிறகு பிரித்தானியாவில் 3.6% ஆக குறைந்துள்ளது. இது இங்கிலாந்து வங்கிக்கு நாட்டின் பணவீக்க தலைவலியை அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.
We’ve published UK Labour Market: September 2022 and accompanying releases https://t.co/zUsylbfMa5
— Office for National Statistics (ONS) (@ONS) September 13, 2022
மேலும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் பொருளாதார வல்லுநர்களால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பிரித்தானியாவின் வேலையின்மை விகிதம் 3.8% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
பிரித்தானியாவின் வேலைவாய்ப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை மே முதல் ஜூலை காலகட்டத்தில் 40,000 ஆக அதிகரித்து இருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
REUTERS
கூடுதல் செய்திகளுக்கு: ராணி இறப்பிற்கு இளவரசர் லூயிஸ் கூறிய அழகான வார்த்தை: வேல்ஸ் இளவரசி கேட் பெருமிதம்
ஆனால் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் பொருளாதார வல்லுநர்களால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் எதிர்பார்க்கப்பட்ட அதிகரிப்பில் இது மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.